சிரியாவில் தேசிய அருங்காட்சியகத்தில் ஆறு பண்டைய ரோமானிய சிலைகள் கொள்ளை
சிரிய தலைநகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்குள் திருடர்கள் நுழைந்து, ரோமானிய(Roman) காலத்தைச் சேர்ந்த பல பழங்கால சிலைகளைத் திருடிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொள்ளை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டமாஸ்கஸின்(Damascus) தேசிய அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
14 ஆண்டுகால உள்நாட்டுப் போரிலிருந்தும், கடந்த ஆண்டு 54 ஆண்டுகால அசாத் குடும்ப ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிறகு ஜனவரி மாதம் அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டது.
நாட்டின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தில், சிரியாவின் நீண்ட வரலாற்றைச் சேர்ந்த விலைமதிப்பற்ற தொல்பொருட்கள் உள்ளன.
ரோமானிய காலத்தைச் சேர்ந்த ஆறு பளிங்கு சிலைகள் திருடப்பட்டதாக சிரியாவின் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கான அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கொள்ளை நடந்த அருங்காட்சியகம் “ஹெலனிஸ்டிக்(Hellenistic), ரோமன் மற்றும் பைசண்டைன்(Byzantine) காலங்களைச் சேர்ந்த கலைப்பொருட்களைக் கொண்ட அழகான மற்றும் வரலாற்று ரீதியான வளமான துறை” என்று அரசாங்கத்தின் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத் துறையின் முன்னாள் தலைவர் மாமூன் அப்துல்கரீம்(Mamun Abdulkarim) தெரிவித்துள்ளார்.




