தமிழரசு கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு!
தமிழரசு கட்சியின் தலைமையை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று (21.01) இடம்பெற்ற நிலையில், குறித்த தேர்தலில் சிறிதரன் வெற்றிப்பெற்றுள்ளார்.
இன்று காலை (21.01) 10.00 வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வாக்களிப்பில் 296 உறுப்பினர்களே கலந்துகொண்டதாகவும், அவர்களில் மட்டகளப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் தேர்தலை புறக்கனித்ததாகவும் அறிய முடிகிறது.
இந்நிலையில், 184 வாக்குகளை பெற்று சிவஞானம் சிறிதரன் வெற்றிப்பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எம்.ஏ.சுமந்திரன் 134 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 19 times, 1 visits today)





