இலங்கையில் மரணித்தோரின் எண்ணிக்கை 635 ஆக அதிகரிப்பு
அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் மரணித்தோரின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (08) வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 192 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையினால் 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.





