இலங்கை: ‘சிறி தலதா வந்தனாவா’: ஸ்ரீ தலதா மாளிகை வெளியிட்டுள்ள விஷேட அறிவிப்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் அமைந்துள்ள புனிதப் பல்லக்கின் சிறப்பு காட்சியான ‘சிறி தலதா வந்தனவ’ வணக்க நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.
விஷேட அறிவித்தலை விடுத்துள்ள ஸ்ரீ தலதா மாளிகை, கண்காட்சிக்கு பெருமளவான மக்கள் வருகை தந்துள்ளமையினால் வழிபாட்டு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், வணக்க நேரம் ஒரு மணித்தியாலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை வழிபாடு நடத்தப்படும் எனவும் ஸ்ரீ தலதா மாளிகை அறிவித்துள்ளது.
16 வருடங்களின் பின்னர் ஸ்ரீ தலதா மாளிகையில் அமைந்துள்ள ‘சிறி தலதா வந்தனவ’ எனும் புனிதப் பல்லக்கின் விஷேட கண்காட்சி ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பமாகி 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
(Visited 1 times, 1 visits today)