அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறி
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவினால் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியானது மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
150 மணித்தியாலங்களை கொண்ட இப்பயிற்சி நெறியில் மாவட்ட செயலக அரச உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள அரச உத்தியோகத்தர்கள் என 91 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இனி வரும் நாட்களில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இரு வகுப்புக்கள் கொண்டவையாக நடைபெறும்.
தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் மட்டுமின்றி தங்களது வேலைகளையும் இலகுபடுத்தி கொள்வதற்கும் இப்பயிற்சி நெறி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ், சிங்கள மொழி பேசும் மக்களிடையே நல்லதொரு உறவுப் பாலமாக அமைவது மொழி அறிவேயாகும்.
மொழியை கற்றறிவதன் மூலம் இரு மக்களின் மத்தியிலும் புரிந்துணர்வுடன் கூடிய இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் எ.எம். இர்பான், தேர்ச்சி பெற்ற வளவாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.