சிங்கள, தமிழ் புத்தாண்டு : இலங்கை முழுவதும் 35000 பொலிஸார் குவிப்பு!

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 35,000 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில், சிவில் உடையில் உளவுத்துறை அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு பகுதியில் பாதுகாப்புக்காக போக்குவரத்து அதிகாரிகள் உட்பட சுமார் 6,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
(Visited 31 times, 1 visits today)