சிங்கப்பூரில் டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கும் இளைஞர்கள் – 8.5 மணிநேரம் செலவிடுவதாக தகவல்
சிங்கப்பூரில் பதின்மவயதினர் டிஜிட்டல் சாதனங்களில் தினமும் ஏறக்குறைய 8.5 மணிநேரம் செலவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்துவதில் மட்டுமே அவர்கள் 3.5 மணிநேரம் செலவழிப்பதாகக் கூறப்படுகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண அவர்கள் ஒதுக்கும் சராசரி நேரம் 89 நிமிடங்களாகும்.
மின்னிலக்கச் சாதனங்களில் அதிக நேரம் செலவுசெய்தாலும், அதிகமானோர் கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்காகவே அவற்றைப் பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.
பொழுதுபோக்கு, சமூக ஊடக நடவடிக்கைகள் அடுத்தடுத்த நிலைகளைப் பிடித்துள்ளன.
டிஜிட்டல் சாதனங்களில் சற்றுக் கூடுதலாக நேரம் செலவிடுவதாகத் தோன்றுகிறது என்று 28 சதவீதமான பதின்மவயதினர் குறிப்பிட்டுள்ளனர்.
அது சரியானதே என்று 64 சதவீதமானோர் குறிப்பிட்டனர். பதின்மவயதினர் டிஜிட்டல் சாதனங்களில் அதிகநேரம் செலவிடுவதாக 40 சதவீதமான பெற்றோர் கருதுகின்றனர்.