உலகின் மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு – மீண்டும் முதலிடம் பிடித்த சிங்கப்பூர்
உலகின் மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் சிங்கப்பூருக்கு முதலிடம் கிடைத்துள்ளதென VisaGuide.World இணையத்தளம் தெரிவித்தது.
விசா இல்லாத அனுமதி, மின்னிலக்கப் பயணச் சான்றிதழ், மின்னிலக்க விசா, தரையிறங்கியதும் வழங்கப்படும் விசா ஆகிய நிபந்தனைகளை வைத்துத் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டது.
199 நாடுகள், வட்டாரங்களிடையே சிங்கப்பூருக்கு 91.27 புள்ளிகள் கிடைத்தன.
பின்லந்து, ஸ்பெயின், ஜப்பான், டென்மார்க், இத்தாலிஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் வந்தன.
சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், விசா இன்றி 159 நாடுகளுக்குச் செல்லலாம்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசையிலும் சிங்கப்பூர் கடவுச்சீட்டிற்கு முதலிடம் கிடைத்தது.
(Visited 1 times, 1 visits today)