உலகம் செய்தி

சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவி நீக்கம்

சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் (Pritam Singh,) அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்றக் குழுவிடம் பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் பிரீதம் சிங் குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இப்பதவிக்குத் தகுதியற்றவர் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவருக்கான கூடுதல் கொடுப்பனவுகள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களில் முதலில் பதிலளிக்கும் முன்னுரிமை போன்ற சலுகைகளை அவர் இழக்கிறார்.

இருப்பினும், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலும், தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் தொடர்ந்து நீடிப்பார்.

ரயீஸா கான் தொடர்பான வழக்கில் பொய் சாட்சியம் அளித்த விவகாரமே இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்தது.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராக தொழிலாளர் கட்சியின் 11 உறுப்பினர்களும் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!