சிங்கப்பூரில் வரம்பைவிட வேகமாக வாகனங்களை ஓட்டினால் அமுலாகும் கடுமையான சட்டம்

சிங்கப்பூரில் வரம்பைவிட வேகமாக வாகனங்களைச் ஓட்டுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கப்படவுள்ளது.
வீதிகளில் மரணங்களையும் காயங்களையும் ஏற்படுத்தும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அவ்வாறு செய்யப்படவிருக்கிறது.
அடுத்த ஆண்டு முதல், அபராதம் 150 வெள்ளிவரை அதிகரிக்கவிருக்கிறது. வேகவரம்பை மீறுவோருக்குக் கூடுதலாக 6 குற்றப்புள்ளிகள் கொடுக்கப்படும்.
கடந்த ஆண்டு வேகவரம்பை மீறி வாகனமோட்டிய சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 65 சதவீதம் கூடியது. கிட்டத்தட்ட 192,000 சம்பவங்கள் பதிவாயின.
போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டில் கூடியது. அவற்றில் 142 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஐந்தாண்டில் அதுவே ஆக அதிகமாகும்.
ஐந்தாண்டுக்கு முன்பிருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அது சுமார் 70 சதவீதம் அதிகமாகும்.
(Visited 10 times, 10 visits today)