ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடாக மாறிய சிங்கப்பூர்

ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடாக சிங்கப்பூர் மாறியுள்ளது.
மக்கள் அதிகம் வாழ, செல்ல விரும்பும், நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என நம்பும் நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
Resonance எனும் வர்த்தக ஆலோசனை நிறுவனமும் Ipsos என்ற சர்வதேச ஆய்வு நிறுவனமும் நடத்திய ஆய்வில் அது தெரியவந்துள்ளது.
9 ஆசிய-பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 7,000க்கும் அதிகமானோர் ஆய்வில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 140க்கும் அதிகமான நகரங்கள் மதிப்பிடப்பட்டன.
பட்டியலில் முதல் 5 இடங்களில், சிங்கப்பூர் முதலாம் இடத்திலும், ஜப்பானின் டோக்கியோ இரண்டாம் இடத்தையும், தென்கொரியாவின் சோல் மூன்றாம் இடத்தை, ஹொங்கொங் நான்காம் இடத்தை, சீனாவின்பெய்ச்சிங் 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)