லண்டனில் உள்ள ஹீத்ரோ டெர்மினல் லவுஞ்சை புதுப்பிக்க திட்டமிடும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது லண்டன் ஹீத்ரோ டெர்மினல் 3 லவுஞ்சை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சில்வர் கிரிஸ் லவுஞ்சை புதுப்பிக்க $4.4 மில்லியன் முதலீடு செய்கிறது. இது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், இருக்கை திறனை அதிகரிக்கவும் செய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பிற்காக ஓய்வறை மூடப்பட்டிருக்கும் போது, தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் யுனைடெட் ஏர்லைன்ஸின் யுனைடெட் கிளப் லவுஞ்ச் அல்லது மற்ற ஸ்டார் அலையன்ஸ் ஓய்வறைகளை விமான நிலையத்தில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு 37.2 மில்லியன் செலவழித்து, சாங்கி விமான நிலைய முனையம் 3 இல் உள்ள முதன்மையான SilverKris மற்றும் KrisFlyer கோல்ட் லவுஞ் புதுப்பிக்கப்பட்டது.
ண்டன் ஹீத்ரோ இன்டர்நேஷனல் (LHR) லவுஞ்ச் அதன் “Home Away from Home” என்ற கருத்தை ஆமோதிக்கும் அதேவேளையில் பயணிகளுக்கு வீட்டில் இருக்கும் ஒரு அற்புதமான உணர்வை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.