வாழ்வியல்

கண்களை பாதுகாக்க உதவும் எளிய வழிமுறைகள்!

நவீன வாழ்க்கைமுறையால் கண்களுக்கு ஏற்படும் சோர்வு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும், ஆரோக்கியமாக வைப்பதற்கும் கீழ்கண்ட வழிமுறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன:

தினசரி கண் சுத்தம்:
சுத்தமான குளிர்ந்த நீரால் கண்களை தினமும் கழுவுவதால் கண் எரிச்சல் குறையும் மற்றும் சீரான உணர்வும் ஏற்படும்.

வெள்ளரிக்காய் குளிர்ச்சி:
வட்டமாக நறுக்கிய வெள்ளரிக்காய்களை கண்களுக்கு மேல் வைக்கவும். இது கண்களுக்கு குளிர்ச்சி அளித்து ரிலாக்ஸ் உணர்வை தரும்.

ரோஸ் வாட்டர் பயன்:
பஞ்சில் ரோஸ் வாட்டரை நனைத்து கண்களில் 10 நிமிடம் வைக்கவும். வெயில் காலங்களில் இது கண்களுக்கு சிறந்த பராமரிப்பு.

கற்றாழை ஜெல்:
குளிரவைத்த கற்றாழை ஜெல்லை மெதுவாக கண்களில் தடவுவது வீக்கம், எரிச்சலை குறைக்கும்.

முழுமையான தூக்கம்:
தினமும் குறைந்தது 7–8 மணி நேரம் தூங்குவதால் கண்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்கும்.

பசுமை பார்வை பயிற்சி:
கணினியில் வேலை செய்யும் போது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறை பச்சை மரங்களை பார்ப்பது கண்களுக்கு ஓய்வு அளிக்கிறது.

ஐஸ் மசாஜ்:
சிறிய துணியில் ஐஸ் கட்டிகளை கட்டி, மெதுவாக கண்களுக்கு மசாஜ் செய்யவும். இது குளிர்ச்சியும் சீரான இரத்த ஓட்டத்தையும் தரும்.

விரல் மசாஜ்:
விரல்களை மெதுவாக கண்கள் மீது சுற்றி மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் மேம்பட்டு கண்கள் புத்துணர்ச்சி அடையும்.

ஸ்கிரீன் நேர கட்டுப்பாடு:
நீண்ட நேரம் ஸ்கிரீன் பார்ப்பதை தவிர்க்கவும். தவிர்க்க முடியாவிட்டால், கண்களுக்கு பாதுகாப்பான ஸ்கிரீன் கண்ணாடிகளை பயன்படுத்தவும்.

சன்கிளாஸ் அணிதல்:
அதிக வெயிலில் வெளியில் செல்லும்போது, கண்களைப் பாதுகாக்க சன்கிளாஸ் அணியவும். இது உலர் காற்று, மாசு, UV கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்கும்.

இந்த எளிய வழிமுறைகளை தினசரி பழக்கமாக கொண்டால், உங்கள் கண்கள் ஆரோக்கியமாக மற்றும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்!

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான