வாழ்வியல்

ரோஜா இதழ் போன்ற உதடுகள் பெற எளிய வழிமுறைகள்!

தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும்.

மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும்.

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைக்கேற்ப உதடுகளை முறையாகப் பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும். கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன.

இதனால் உதடுகளில், “வாசலின்’ தடவிக் கொள்ளலாம். வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் வரலாம். இதற்கு உணவில் கீரைகள்,பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியைச் சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறைய, வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, “சன்ஸ்கிரீன் லோஷனை’ தடவி வரலாம். அதிக குளிர் மற்றும் வெப்பத்தைத் தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும்.

பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான