உலகம்

சிங்கப்பூரில் தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி! வர்த்தகச் சந்தையில் அதிகரிக்கும் கிராக்கி

சிங்கப்பூரில் வெள்ளியில் முதலீடுகளை மேற்கொள்ள அதிகளவான வர்த்தகர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

தங்கத்தை விட வெள்ளியின் விலை மிகவும் குறைவாக உள்ளதாகவும், அதற்கான கிராக்கி அதிகரிக்கும் எனவும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

வெள்ளியிலான வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் கொள்வனவு செய்வதில் ஒரு தரப்பினர் விருப்பம் கொண்டுள்ளனர்.

அதேவேளை, தங்கத்தில் முதலீடு செய்வதே வழக்கம் என்றும், வெள்ளிப் பொருட்களை வாங்குவதில்லை என்றும் பாரம்பரிய தங்க முதலீட்டாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தங்கத்தின் விலையைப் போன்று வெள்ளியின் விலையும் ஏற்ற இறக்கத்தைக் காணும் எனப் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலக அளவில் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன் விலை உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக் கட்டிகளை (Silver Bars) வாங்கும்போது பொருள் மற்றும் சேவை வரியைச் (GST) செலுத்தத் தேவையில்லை. ஆனால், வெள்ளிப் பொருள்களை (Silver Items) கொள்வனவு செய்யும்போது வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்