இங்கிலாந்தில் வீடொன்றில் சடலமாகக் மீட்கப்பட்ட சீக்கிய பெண்! – வெளியான விபரங்கள்
இங்கிலாந்திலுள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சீக்கிய பெண்ணின் பெயர் முதலான விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி, காலை 6.00 மணியளவில், இங்கிலாந்தின், Beaconsfield என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டார்கள்.
அப்போது, அந்த வீட்டில் பெண்ணொருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தற்போது, அந்தப் பெண்ணின் பெயர் பரம்ஜித் கோஷல் கில் (40) என பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், பரம்ஜித்தின் கணவரான பால் கில் (39) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி, ரெடிங் கிரௌன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.





