ஜிம்பாப்வே அணியின் தலைவராக சிக்கந்தர் ராசா நியமனம்
ஜிம்பாப்வே டி20 அணியின் தலைவராக ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் இடம் பிடிக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நமீபியாவுக்கு எதிரான டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 3-2 என இழந்ததை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கந்தர் ராசா இதற்கு முன்பு 2015 முதல் 2021 வரை நான்கு போட்டிகளில் ஜிம்பாப்வேயின் தலைவராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)





