இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி!
இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக தீபால் பெரேரா தெரிவித்தார்.
ஆட்டிசம் மட்டுமின்றி புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது என்றார்.
எனவே தற்போதைய சூழ்நிலையில் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)