அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை! கூட்டு எதிரணி புது வியூகம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே Suresh Saleh கைது செய்யப்பட்டதற்கு கூட்டு எதிரணி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மக்கள் மனுவில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை மஹரகமவில் இன்று ஆரம்பமானது. மஹரகம நகரசபையின் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் இதற்குரிய ஏற்பாட்டை செய்திருந்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எதிரணி அரசியல் பிரமுகர்கள் மற்றும் தேரர்கள் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு லட்சம் கையொப்படங்கள் திரட்டப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என எதிரணி அரசியல் பிரமுகர்கள் குற்றஞ்சாட்டினர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!