சியரா லியோன் ஜனாதிபதி இலங்கை வருகை
சியரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் மாடா பயோ இன்று (20) இரவு இலங்கைக்கு வரவுள்ளார்,
இந்த விஜயம் தனிப்பட்டது என்றாலும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி பயோவை சந்திக்கவுள்ளார்.
சியரா லியோன் ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயமாக இல்லாவிட்டாலும், அவர் தங்கியிருக்கும் போது VVIP பாதுகாப்பு மற்றும் வசதிகளைப் பெறுவார்.
தனிப்பட்ட விஜயமாக இலங்கை வரும் அவர் நாளை சமோவா செல்லவுள்ளார்.
இந்த ஆண்டுக்கான பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு நாளை (21) முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.





