ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதி!
இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விலா எலும்புக் கூண்டு காயம் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் அவர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் சுமார் ஐந்து முதல் ஏழு நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது அவர் காயமடைந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்தே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 6 visits today)





