இலங்கை

விஞ்ஞான பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி

திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி டேகா உமாசங்கர் முதலாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

எதிர்காலத்தில் சிறந்த வைத்திய நிபுணராக வருவதற்கு ஆசைப்படுவதாகவும் தனக்கு கற்பதற்கு உதவி அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவி ஜகுபர் றிஸ்னி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

தந்தை கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் விஞ்ஞான உயிரியல் பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளேன்.

எனது வெற்றிக்கு உதவிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் தனது கல்விக்காக உதவிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.எதிர்காலத்தில் பெண் நோயியல் வைத்திய நிபுணராக வர வேண்டும் என்பதே தனது இலக்கு எனவும் தெரிவித்தார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!