ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமா இல்லையா? – நாமல் கருத்து!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை அவரது கட்சியே தீர்மானிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற பெண் அமைப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் அவரைப் போன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே சிறந்தது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் எம்மைப் போன்றவர்கள் மாத்திரமின்றி, 97 வயதுடைய எனது பாட்டியின் கழுத்தையும் நெறிக்கின்றது.
10 ஆண்டுகளின் பின்னர் வாக்குமூலளிப்பதற்கு அழைப்பாணை விடுக்கப்படுகிறது. சில அரசியல் சக்திகள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் வங்குரோத்தடையும் போது இவ்வாறு தான் செயற்படும் எனத் தெரிவித்துள்ளார்.