இலங்கை வெளிவிவகாரச் சேவையில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை
வெளிநாட்டு சேவைக்கு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கூறுகிறார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த நாட்டில் 55 நாடுகளுக்கும் 24 துறைகளுக்கும் 164 அதிகாரிகள் பணிபுரிவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கைக்கு மிக முக்கியமான நாடான இந்தியாவில் 6 பேர் மாத்திரமே பணிபுரிவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு சேவைக்கு தேவையான ஊழியர்களின் எண்ணிக்கை 264 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவையான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிநாட்டு சேவைக்கான ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
(Visited 5 times, 1 visits today)