அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – 9 வயது சிறுவன் கைது

அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் 32 வயது நபர் உயிரிழந்தமை தொடர்பில் 9 வயதுப் பிள்ளை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலையில் துப்பாக்கிச் சூடுபட்டு படுகாயமடைந்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரைக் காப்பற்ற முடியவில்லை என்று AFP செய்தி கூறுகிறது. உயிரிழந்தவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
கைதுசெய்யப்பட்ட பிள்ளை உயிரிழந்த உறவினர் என்று தெரியவந்தது. அந்தப் பிள்ளை ஆணா பெணா, பெயர் என்ன போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கொலைக் குற்றச்சாட்டு கொண்டுவருவது பற்றித் தாங்கள் பரிசீலிப்பதாக அந்தப் பகுதிக் காவல்துறை தெரிவித்தது.
மக்களை விடத் துப்பாக்கிகள் அதிகம் உள்ள அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழக்கின்றனர்.
(Visited 11 times, 1 visits today)