செய்தி

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – 10 பொலிஸ் குழுக்கள் விசாரணையில் – 6 பேர் கைது

அத்துருகிரியவில் நேற்று பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் க்ளப் வசந்த உள்ளிட்ட 2 பேர் கொல்லப்பட்டதுடன், பாடகி சுஜீவா உள்ளிட்ட 4 பேர் காயமுற்றனர்.

இந்தத் தாக்குதல் வெளிநாடொன்றில் இருந்து திட்டமிட்டு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் இருவேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அத்துருகிரியவில் உள்ள வணிக கட்டடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வணிக கட்டடத்தின் (Tattoo Shop) உரிமையாளர் உட்பட 06 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவுடன் வணிக கட்டடத்தின் (Tattoo Shop) உரிமையாளரும் தொடர்புடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

(Visited 24 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!