பாகிஸ்தானில் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு – 7 பேர் மரணம்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு சென்றுகொண்டிருந்த பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலூசிஸ்தானின் பர்ஹன் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஆயுதமேந்திய கும்பல் பஸ்சை இடைமறித்தது. பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிய அந்த கும்பல் அடையாள அட்டைகளை சோதித்தனர்.
அதில், 7 பயணிகள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என தெரிந்ததும் அவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், 7 பேரின் உடல்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 17 times, 1 visits today)





