அமெரிக்காவில் ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவின் சிகாகோவில் ரயிலில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
2024 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் 378 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
(Visited 22 times, 1 visits today)