இலங்கையில் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு! பெண் ஒருவர் காயம்!
மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாகந்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)