பம்பலப்பிட்டியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவு!

பம்பலப்பிட்டி பகுதியில் இன்று (07.08) மாலை துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி மெரைன் ட்ரைவ் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேன் ஒன்றில் வந்த அடையாளந்தெரியாத குழுவொன்று கார் ஒன்றை இலக்கு வைத்து இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதுவரி திணைக்களத்தின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)