ராகம பகுதியில் துப்பாக்கிச் சூடு!!! மூவர் படுகாயம்
ராகம, வல்பொல பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 வயது இளைஞன் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.
வல்பொல பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





