கொழும்பில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : ஒருவர் பலி
கிரேண்ட்பாஸ் – வதுல்லவத்தை பகுதியில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.





