அமெரக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் ; 3 பொலிஸார் உட்பட நால்வர் பலி

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லொடி நகரில் உள்ள குடியிருப்பில் சிலர் ஆயுதங்களுடன் இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்ற பொலிஸார் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டில் பதுங்கி இருந்த நபர்கள் பொலிஸார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பொலிஸார் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
3 மணிநேரத்திற்கு மேல் நீடித்த துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸார் உயிரிழந்தனர். 5 பொலிஸார் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய ஒரு நபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் தப்பியோடினார். இதையடுத்து, தப்பியோடிய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
(Visited 16 times, 1 visits today)