தென்னிலங்கையின் முக்கிய பகுதியில் துப்பாக்கிச்சூடு!
மட்டக்குளிய பிரதேசத்தில் இன்று (12.03) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் மட்டக்குளி அலிவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.





