நுகேகொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்
நுகேகொடை – கொஹூவல பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் இன்று (22.12) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 25 வயதுடையவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கல்கிசை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மற்றும் கொஹுவலை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





