ஜெருசலேமின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கிச்சூடு – இரு பாலஸ்தீனியர்கள் பலி!
இஸ்ரேலியப் படைகள் ஜெருசலேமின் புறநகர்ப் பகுதியில் இரண்டு பாலஸ்தீன இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதை இஸ்ரேலிய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அச்சுறுத்தலை ஏற்படுத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் அம்ர் கலீத் அகமது அல்-மர்பூ (Ahmed Al-Marbou – 18) என்ற இளைஞனும், சமி இப்ராஹிம் சமி மஷாயேக் (Sami Ibrahim Sami Mashayekh – 16) என்ற சிறுவனும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஃப்ர் அகாப் (Kufr Aqab) நகரில் பாலஸ்தீனிய குழு பட்டாசுகளை வீசியதாகவும், குழப்பத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்தே இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது.
போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் இரு தரப்பிலும் தொடரும் இவ்வாறான மோதல் சம்பவங்கள் போர் நிறுத்த சூழலை சிக்களுக்கு உள்ளாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.




