கொழும்பில் துப்பாக்கி சூடு – இருவர் உயிரிழப்பு

கொழும்பு கிரேண்ட்பாஸ், பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண்ணொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
வடுல்லவத்தை புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை பெண் ஒருவர் உட்பட இருவர் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, 32 வயதான கே. ஜி. ஆர். தர்ஷன என்ற நபர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதுடன், ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
(Visited 23 times, 1 visits today)