உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவின் பிரபல கடற்கரையில் துப்பாக்கிச்சூடு – 16 பேர் வைத்தியசாலையில்!

ஆஸ்திரேலியாவின் (Australia) புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த 16 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) ஆம்புலன்ஸ் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

காம்பெல் பரேட் (Campbell Parade) என்ற பகுதியில் 50″ துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் குறித்த பகுதியை தவிர்க்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர்  குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள அனைத்து வழிக்காட்டுதல்களையும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!