புளோரிடாவில் டொனால்ட் டிரம்ப் இருந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு
டொனால்ட் ட்ரம்பின் பிரச்சார குழு, ட்ரம்ப் அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
“ஜனாதிபதி ட்ரம்ப் அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்பாக உள்ளார். தற்போது மேலதிக விவரங்கள் எதுவும் இல்லை” என்று பிரச்சார செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங்கின் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப், அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து ஒரு நாள் இடைவெளியில், புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, டிரம்ப் குறிவைக்கப்பட்டதற்கான உடனடி அறிகுறி எதுவும் இல்லை.
(Visited 7 times, 1 visits today)