டொரண்டோவில் அலுவலகம் ஒன்றில் துப்பாக்கி சூடு ; தாக்குதல்தாரி உட்பட மூவர் பலி!

கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 3 பேர் திங்கள்கிழமை(ஜூன்17) உயிரிழந்தனர்.
உள்ளூர் ஊடகங்களின்படி, 3:25 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் குறித்து டான் மில்ஸ் பகுதியில் உள்ள அலுவலகக் கட்டிடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
அங்கு பொலிஸார் விரைந்த போது இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர், அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு ஒரு தகராறு நடந்ததாக தாங்கள் நம்புவதாக போலீஸார் தெரிவித்தனர்.
(Visited 12 times, 1 visits today)