மெக்சிகோவில் உள்ள மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி
தென்கிழக்கு மெக்சிகோ மாநிலமான தபாஸ்கோவில் உள்ள வில்லாஹெர்மோசா நகரில் உள்ள மதுபான விடுதியில் ஆயுதமேந்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“ஆயுதமேந்திய நபர்கள்” “குறிப்பிட்ட நபரைத் தேடி” விடுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக மாநில துணை வழக்கறிஞர் கில்பர்டோ மெல்கியேட்ஸ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தில் குறைந்தது ஐந்து பேர் இறந்து கிடந்தனர், மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இறந்தார் என்று அதிகாரி கூதெரிவித்தார்றினார்.
மத்திய மெக்சிகோவின் ஒரு பகுதியான குவெரெடாரோ நகரில் இதேபோன்று இரண்டு வாரங்களுக்கு முன் நிகழ்ந்தது, அந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.
தபாஸ்கோவில் என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு உள்ளூர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கம் “ஒருங்கிணைந்துள்ளது” என்று மத்திய பொதுப் பாதுகாப்பு செயலாளர் ஓமர் கார்சியா ஹர்ஃபுச் தெரிவித்தார்.