பிரித்தானிய சிறுமி சாரா கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்..!
பிரித்தானியாவில் 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், மாயமானதாக கூறப்படும் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரை 5 நாட்களுக்கு பின்னர் தான் பொலிஸார் தேடத் தொடங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமி சாரா ஷெரீப் கொலை வழக்கில் தற்போது மாயமாகியுள்ள மூவருக்கும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆயுளுக்கும் ஒளிந்திருக்க முடியாது எனவும் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.சிறுமி சாரா கொலை வழக்கு தொடர்பில் தற்போது பாகிஸ்தானில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10ம் திகதி Woking பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சிறுமி சாராவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அவரது தந்தை உர்ஃபான் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் இருந்து லண்டனில் உள்ள காவல்துறையினரை அழைத்து தகவல் தெரிவித்த பின்னரே பொலிஸார் சிறுமியின் சடலத்தை மீட்டுள்ளனர்.ஆனால் சிறுமியின் மரண காரணம் தொடர்பில் தற்போதும் மர்மம் நீடிப்பதாகவே கூறப்படுகிறது. இருப்பினும், உடற்கூறு ஆய்வில் சிறுமி சாரா பலமுறை உள்காயங்களுக்கு ஆளானது தெரியவந்தது.
சிறுமியின் சடலம் மீட்கப்படுவதற்கும் ஒருநாள் முன்னர் உர்ஃபான் ஷெரீப் மற்றும் அவரது துணைவி உட்பட மூவர் இஸ்லாமாபாத் தப்பியதாகவே பொலிஸார் நம்புகின்றனர்.இந்த நிலையில், சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து நாட்கள் வரை தேடுதலுக்கு உதவுவதற்கான கோரிக்கையை அவர்கள் பெறவில்லை என பாகிஸ்தான் காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 15ம் திகதி தான் தங்களுக்கு லண்டன் காவல்துறையில் இருந்து உரிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.