ஜெர்மனியில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஜெர்மனி நாட்டில் சிறுவர் வன்கொடுமைகள் தற்பொழுது அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் ஆண்டுதோறும் 15 ஆயிரம் வரையான சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 25ஆம் திகதி காணாமல் போன சிறுவர்களை நினைவுப்படுத்தும் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் வருடம் ஒன்றுக்கு இவ்வாறு 15 ஆயிரம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மாயமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஜெரம்னிய நாட்டில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று புள்ளி விபர திணைக்களம் தங்களது கருத்தை வெளியிட்டுள்ளது.
மேலும் இவ்வாறு காணாமல் போனவர்கள் மீண்டும் வீடு திரும்பும் சந்தர்ப்பத்தில் அவர்களில் மனோவியல் தொடர்பில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.