ஜோர்டானில் கொல்லப்பட்ட இந்தியர் குறித்து குடும்பத்தினர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்
இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியரின் குடும்பத்தினர், அவர் வேலை மோசடியால் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவித்துள்ளனர்.
தாமஸ் கேப்ரியல் பெரேரா பிப்ரவரி 10 அன்று இஸ்ரேல் எல்லையில் ஜோர்டானிய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார்.
ஒரு இலாபகரமான வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஜோர்டானுக்கு அவர் ஈர்க்கப்பட்டார், அது நடக்காதபோது, அங்கு வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டதால் அவர் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.





