ஐரோப்பா

ஜெர்மனியில் பெண் ஒருவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஜெர்மனியில் சிரியாவிற்கு ஆதரவாக இயங்கிய பெண் ஒருவர் தண்டனைக்குள்ளாகியுள்ளார்.

குறித்த பெண் ஜெர்மனியில் இருந்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்பிக்கு 2015,2016 ஆம் ஆண்டு சென்றார்.

அதன் பின்னர் அங்கே பல வன்கொடுமைகளில் ஈடுப்பட்ட பெண் ஒருவருக்கு கடூழியசிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் செலர் என்று சொல்லப்படுகின்ற உயர் நீதிமன்றமானது குறித்த பெண்ணுக்கு 8 வருடம் 6 மாதம் கடூழிய சிறை தண்டனை விதித்து இருக்கின்றது.

அதாவது இவ்வாறு ஜெர்மன் நாட்டில் இருந்து சிரியாவிற்கு சென்ற 31 வயதுடைய பெண்ணானவர் பல வன்முறைகளில் ஈடுப்பட்டதாகவும்,

இதேவேளையில் ஜெர்மனியில் தாக்குதல் சம்பவம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டதாகவும்,

அந்த திட்டம் பொலிஸாரால் நிரூபிக்கப்பட்டதால் இவருக்கு இந்த சஜிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவர் தனது கணவருடன் சேர்ந்து இவ்வாறு சிரியாவில் இந்த வன்முறைகளில் ஈடுப்பட்டார் என்று தெரிய வந்து இருக்கின்றது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!