வடக்கு லண்டனில் அதிர்ச்சி சம்பவம்!-முதியவர் மீது கத்தி குத்து தாக்குதல்

வடக்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
66 வயது முதியவர் படுகாயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு, லாக்ஹார்ட் குளோஸ், என்ஃபீல்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு அம்பியுலன்ஸ் சேவையும் சென்ற போது, அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.இந்தக் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க முடிந்த அனைத்தையும் செய்வோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் முறையாக அடையாளம் காணப்படவில்லை எனவும் பிரேத பரிசோதனை ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
(Visited 15 times, 1 visits today)