இந்தியாவில் பல்கலை வளாகமொன்றில் அதிர்ச்சி சம்பவம்: காதலன் கண் முன்னே காதலிக்கு பாலியல் துஷ்பிரயோகம்
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டு மாணவர் உடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.
இது குறித்து அந்த மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரையடுத்து கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியிடம் அத்துமீறியவர்கள் பல்கலை. மாணவர்களா? அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா? என்பது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் அதிகாரிகள் புகாரளித்த மாணவியிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)