ஐரோப்பா

ரஷ்யாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஹெலிகப்டர் விபத்து – 6 பேர் பலி – பலர் காயம்

ரஷ்யாவின் சைபீரியாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எம்ஐ-8 ஹெலிகப்டர் தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டாயில் விபத்துக்குள்ளாகியுள்ளதென ரஷ்யாவின் அவசரகால அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹெலிகப்டர் தரையிறங்கும்போது மின்கம்பியில் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்ததாகும். இந்த ஹெலிகாப்டரில் சுற்றுலாவுக்காக குழு ஒன்று பயணம் செய்துள்ளது. ஹெலிகப்டரில் மொத்தமாக எத்தனை பேர் பயணித்தனர் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

எம்ஐ-8 ஹெலிகாப்டர் 1960ஆம் ஆண்டு களில் வடிவமைக்கப்பட்ட இரட்டை என்ஜின் ஹெலிகப்டர் ஆகும்.
இந்த ஹெலிகப்டர் ரஷ்யாவில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எம்ஐ-8 ஹெலிகாப்டரில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!