இன வெறுப்பால் பிரான்ஸ் நாட்டவரின் அதிர்ச்சி செயல் – அண்டை வீட்டார் மரணம்
பிரான்ஸில் நபர் ஒருவர் அவருடைய துனீசிய அண்டை வீட்டாரைச் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
மற்றொரு துருக்கிய நாட்டவரை தாக்கியுள்ளார். அவர் அதைச் செய்வதற்கு முன் இன வெறுப்பைத் தூண்டும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதல் என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர்.
தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார். சற்றுத் தொலைவில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஒரு காணொளியில் வெளிநாட்டினரைச் சுட்டுக் கொல்ல பிரெஞ்சு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரான்ஸின் பொது அமைதியைக் குலைக்கத் திட்டமிட்டதால் கைது செய்யப்பட்ட நபரிடம் பயங்கரவாத சதி குறித்து விசாரணை நடத்துவதாக ஆணையம் தெரிவித்தது.
(Visited 29 times, 1 visits today)





