ஐரோப்பா

பிரான்ஸில் பெற்றோர்களுடன் இணைந்து சிறுவர்கள் செய்யும் அதிர்ச்சி செயல்

பிரான்ஸில் 70 சதவீதமான பிரஞ்சு பெரியவர்கள் சிறுவர்களை மது அருந்த அனுமதிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் ‘OpinionWay’ அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.

15 வயதுக்கு குறைவானவர்கள் கொண்டாட்ட காலங்களில் தம்மோடு சேர்ந்து மது அருந்த அனுமதிப்பது தவறானது அல்ல என 46% சதவீதமான பெற்றோர்கள் கருதுகின்றனர்.

அவர்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு எதிரில் நாளாந்தம் மது அருந்துவதுடன், விடுமுறை நாட்களில் பிள்ளைகளும் சிறிதளவில் மதுவை சுவைக்க அனுமதிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தள கேள்வி தாள் மூலம் 3225 பெற்றோர்களிடம், 18 வயதுக்கு மேற்பட்ட மது அருந்தும் 1528 இளையோரிடமும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக ‘OpinionWay’ அமைப்பு தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!